குடிசை மாற்று வாரிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது


குடிசை மாற்று வாரிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 19 July 2020 2:17 AM GMT (Updated: 19 July 2020 2:17 AM GMT)

குடிசை மாற்று வாரிய பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது.

தேனி,

தேனி மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ், சொந்த வீடு இல்லாத மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 2,925 குடிசை வீடுகள் கண்டறியப்பட்டு, அவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் தொடர்பாக அரசுத்துறை அதிகாரிகளுடன் தேனி சுற்றுலா மாளிகையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், குடிசை மாற்று வாரிய பணிகளின் முன்னேற்றம், நிறைவு அடைந்துள்ள பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார். நிறைவு பெற்ற குடியிருப்புகளை ஆகஸ்ட் மாதத்துக்குள்ளும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து செப்டம்பர் மாதம் இறுதிக்குள்ளும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் சண்முகசுந்தரம், உதவி பொறியாளர் மணிபாலன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story