மாவட்ட செய்திகள்

வேலூரில், பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழை தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 25 கடைகள் சேதம் + "||" + In Vellore, Heavy rain with strong winds In the temporary vegetable market Damage to 25 stores

வேலூரில், பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழை தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 25 கடைகள் சேதம்

வேலூரில், பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த மழை தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 25 கடைகள் சேதம்
வேலூரில் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. மாங்காய் மண்டி பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் 25 கடைகள் சேதம் அடைந்தன.
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் சுட்டெரிக்கிறது. மாலை மற்றும் இரவில் பலத்த மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று பகல் வழக்கம்போல் வெயிலின் தாக்கம் காணப்பட்டது. அதிகபட்சமாக 95.4 டிகிரி வெயில் பதிவானது. மதியம் 2 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.


அதைத்தொடர்ந்து கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. மாலை 3 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. முதலில் மிதமாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது இடி, மின்னல், காற்றுடன் 1½ மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அதன்பிறகு சீராக மழை பெய்தது. இதனால் தெருக்கள், சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கிரீன் சர்க்கிள், திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், காமராஜர் சிலை அருகே, ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். வேலூர் மாங்காய் மண்டி பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் இரும்புத்தகடுகளால் 85 கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் 25 கடைகளின் இரும்புத்தகடுகள் பறந்து உருக்குலைந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி மூட்டைகள் மழையில் நனைந்தன. காய்கறி கடைகளை பழைய படி நேதாஜி மார்க்கெட்டுக்கு மாற்ற வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

சத்துவாச்சாரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே உள்ள சாலை மற்றும் அப்பகுதியில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து சாலையில் ஓடியது. மழைநீர் வெளியேற போதிய வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். அதேபோல் கஸ்பா, கொணவட்டம், கன்சால்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவுநீர் ஓடியது.

மழைநீர் செல்ல கால்வாய் வசதி அமைத்துத்தர வேண்டும் எனப் பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் பரவலான மழையால் பல்வேறு பகுதிகளில் குளம், குட்டைகளில் தண்ணீர் பெருகி வருகிறது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. தொடர் மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூரில் நடந்த முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்துக்கு எங்களையும் அழைக்கவில்லை - அமைச்சர் கே.சி. வீரமணி பேட்டி
வேலூரில் நடந்த முதல்-அமைச்சர் ஆய்வு கூட்டத்துக்கு எங்களையும் அழைக்கவில்லை. மாவட்ட அமைச்சர் என்ற முறையில் கலந்து கொண்டேன் என்று அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
2. வேலூரில் ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி
வேலூரில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஓய்வுப்பெற்ற சாலை ஆய்வாளர் உள்பட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
3. வேலூரில் படம் எடுத்து மிரட்டிய வாலிபர்களின் செல்போனில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் தீக்குளித்த பள்ளி மாணவி - பரபரப்பு வாக்குமூலம்
வேலூர் அருகே குளிக்கும் வீடியோவை வைத்து மிரட்டியதால் பள்ளி மாணவி தீக்குளித்தார். இந்த வழக்கில் கைதான வாலிபர்களின் செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தாக அந்த மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
4. வேலூரில் ஒரே நாளில் பெண் போலீஸ் உள்பட 10 பேருக்கு கொரோனா - மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்தது
வேலூர் மாவட்டத்தில் பெண் போலீஸ் உள்பட 10 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் முலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181-ஆக உயர்ந்துள்ளது.
5. வேலூரில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி; மற்றொருவர் படுகாயம் - கட்டுமான பணிக்காக இரும்பு குழாயை தூக்கி சென்றபோது பரிதாபம்
வேலூரில் கட்டுமான பணிக்காக இரும்பு குழாயை தூக்கி சென்றபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். அவரை காப்பாற்ற முயன்று படுகாயம் அடைந்தவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.