திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா


திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 Aug 2020 8:24 AM IST (Updated: 24 Aug 2020 8:24 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 384 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 374 ஆக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 384 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 453 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 18 ஆயிரத்து 229 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

3 ஆயிரத்து 850 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானோரின் எண்ணிக்கை 374 ஆக உயர்ந்தது.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊரப்பாக்கம், காரணைப்புதுச்சேரி, வண்டலூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி உள்பட பல்வேறு கிராம பகுதியில் வசிக்கும் 41 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கொளப்பாக்கம், காயரம்பேடு, கீரப்பாக்கம் ஆகிய கிராம பகுதியில் 5 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 பேர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 352 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாயினர். இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 498 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 20 ஆயிரத்து 619 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 376 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 503 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் 20 வயதுடைய பெண் போலீஸ், படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 25, 28 மற்றும் 30 வயதுடையவர்கள், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 32, 38 வயதுடைய ஆண்கள், எருமையூர் பகுதியை சேர்ந்த 50 வயது பெண், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர், சாலமங்கலம் ஊராட்சி பகுதியை 44 வயது பெண், கரசங்கால் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர், ஒரகடம் பகுதியை சேர்ந்த 38 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 514 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 13 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2 ஆயிரத்து 297 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், பலியானோரின் ண்ணிக்கை 204 ஆக உயர்ந்தது.

Next Story