காஞ்சீபுரத்தில் ரூ.1¾ கோடியில் மானியத்துடன் கடன் உதவிகள்


காஞ்சீபுரத்தில் ரூ.1¾ கோடியில் மானியத்துடன் கடன் உதவிகள்
x
தினத்தந்தி 30 Aug 2020 6:21 AM IST (Updated: 30 Aug 2020 6:21 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார். தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

காஞ்சீபுரம்,

தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் வேலை வாய்ப்பினை இழந்து பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.1 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார். தமிழக ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.சோமசுந்தரம், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி, மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story