புதுச்சேரியில் விவசாயிகள் உண்ணாவிரதம்
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
புதுச்சேரி,
60 வயதை அடைந்த அனைத்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கைவினை கலைஞர்களை பதிவு செய்து மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கவேண்டும், விவசாய கமிஷன் பரிந்துரைப்படி நெல் மற்றும் இதர பயிர்களுக் கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை புதுச்சேரி விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி புதுவை சுதேசி மில் அருகே உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரதத்துக்கு விவசாயிகள் சங்க தலைவர் கீதநாதன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
விவசாய தொழிலாளர் சங்க தேசிய துணைத்தலைவர் ராமமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பெருமாள், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்கால் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மின்சார சட்ட மசோதா சட்டத்தை திரும்ப பெறக்கோரி பழைய ரெயில் நிலையம் அருகே உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story