தூத்துக்குடி மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடி மாவட்டத் தில் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
திருச்செந்தூர்,
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் சன்னதி தெரு சைவ வேளாளர் ஐக்கிய சங்க வளாகத்தில் வ.உ.சி சிலை அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சுப்பிரமணிய பிள்ளை தலைமை தாங்கினார். வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. செயலாளர் சந்தனராஜ், பொருளாளர் ஞானசுந்தரம், நிர்வாகஸ்தர்கள் ஆனந்த ராமச்சந்திரன், வெங்கடாசலம், சீனிவாசன், வேல்மணி, பேச்சிமுத்து, மகாராஜன், பொன்முருகேசன், முத்துக்குமார் கண்ணன், சங்க கணக்கர்கள் சடகோபால், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்ட சைவ வேளாளர் சங்கம் சார்பாக மாவட்ட செயலாளர் பாலன் தலைமையில், மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணை தலைவர் ராமன், நிர்வாக துணை தலைவர் இசக்கிமுத்து, இளைஞர் பேரவை ஆலோசகர் ஆனந்த ராமச்சந்திரன், இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் ராம்குமார், இளைஞர் பேரவை துணை தலைவர் பொன் முருகேசன், மாவட்ட வ.உ.சி. பேரவை துணை செயலாளர் சீனிவாசன், துணை தலைவர் சுந்தர், நிர்வாகிகள் பரமசிவன், முருகேசன், நமசிவாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதா சார்பில் தெற்கு மாவட்ட துணை தலைவர் செந்தில்வேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருச்செந்தூர் நகர தலைவர் சரவணன், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் கரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர் நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் மணல்மேடு முருகேசன், ஒன்றிய இணை செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் ஒன்றிய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் சோடா ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆறுமுகநேரி நகர செயலாளர் சிவக்குமார், நகர துணை செயலாளர் சாந்தக்குமார், பிச்சிவிளை ஊராட்சி செயலாளர் செல்வக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வ.உ.சி. சிலைக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், ஒன்றிய அமைப்பாளர் பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிறுவன தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மன்ற தலைவர் செல்வன் சண்முகசுந்தர், செயலாளர் நமச்சிவாயம், பொருளாளர் தீத்தாரப்பன், இணை தலைவர் ஆனந்த ராமச்சந்திரன், துணை தலைவர் குமார், இணை செயலாளர் பொன்முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் வட்டார சைவ வேளாளர் சங்கம் சார்பில் காசிவிஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சன்னதி வளாகம் முன் வ.உ.சி. உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பா.ஜ.க. மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் சங்க செயலாளர் பரமசிவன் தலைமை தாங்கினார். சங்க தலைவர் ஆறுமுகம், அமைப்பாளர் வெங்கடாசலம், கொம்பன்குளம் ஆறுமுகநயினார், செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
ஆத்தூர் சைவ வேளாளர் சமுதாயம் சார்பில் வ.உ.சி. உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஆத்தூர் சைவ வேளாளர் அபிவிருத்தி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குலசேகரன்பட்டினத்தில் வ.உ.சி. மன்றம் சார்பில் மெயின் ரோட்டில் உள்ள தியாகிகள் நினைவு மண்டபத்தில் வைத்து பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திருஅருள் மேல்நிலைப்பள்ளி இயக்குனர் சண்முகம் பிள்ளை, முன்னாள் தலைமை ஆசிரியர் சிவ பழனீஸ்வரன் மற்றும் மோகன சுந்தரம், மன்ற நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், சிதம்பரகுருநாதன், அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி சைவ வேளாளர்கள் சங்கத்தில் வ.உ.சி. சிலைக்கு சங்க தலைவர் தெய்வேந்திரன் மாலை அணிவித்தார். இதில் செயலாளர் சுந்தரம், துணை தலைவர் அருணாசலம், துணை செயலாளர் சுப்பிரமணியன், தணிக்கையாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாவட்ட செயலாளர் கதிரேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வ.உ.சிதம்பரனாரின் கொள்ளு பேத்தி செல்வி, அவரது கணவர் வழக்கறிஞர் போ.முருகானந்தம் ஆகியோர் கோவில்பட்டியில் உள்ள அவர்களது வீட்டில் வ.உ.சி. படத்துக்கு மரியாதை செலுத்தினர். அப்போது அவர் கூறுகையில், வ.உ.சி. பிறந்த தினமாக செப்டம்பர் 5-ந் தேதியை தேசிய வழக்கறிஞராக தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தென்னிந்திய தியாகிகளை சிறப்பிக்கும் வண்ணமும், அவர்களின் தியாக வரலாறுகளை அடுத்து வரும் சந்தியினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.
எட்டயபுரத்தில் சைவ வேளாளர் சங்கம் சார்பில் வ.உ.சி. உருவப்படத்திற்கு சங்க தலைவர் சங்கரசுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் செயலாளர் ஆவுடைநாயகம், துணை தலைவர் மீனாட்சிசுந்தரம், பொருளாளர், பிச்சைகுட்டி, மாவட்ட இணை செயலாளர் சண்முகவேல்முருகன், வ.உ.சி. பேரவை தூத்துக்குடி மாவட்ட தலைவர் பாலதண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரத்தில் வ.உ.சி. பிறந்த நாளை முன்னிட்டு பட்டத்து விநாயகர் கோவில் திடலில் சி.ஐ.டி.யு. விவசாய தொழிலாளர் சங்கம், விவசாய சங்கம் சார்பில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் நடராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. கன்வீனர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரவீந்திரன் தொடங்கி வைத்து பேசினார். சி.பி.எம். கிளை செயலாளர் உறுதி மொழி வாசித்தார். இதில் விவசாய தாலுகா செயலாளர் பாலமுருகன், சி.ஐ.டி.யு. பாரதி, மில் பொருளாளர் மாணிக்கவாசகம், கட்டுமான சங்க பொருளாளர் மாரிமுத்து, நடராஜன், கிருஷ்ணசாமி துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத்தில், வ.உ.சி. பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சி. உருவச்சிலைக்கு துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, துணை பாதுகாவலர் பிரவீன்குமார் சிங் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துறைமுக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story