மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்கக்கோரி மயிலாடுதுறையில் கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
நாகை மாவட்டம் தலைஞாயிறில் என்.பி.கே.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. மூடப்பட்ட இந்த ஆலையை மீண்டும் திறக்க கோரி மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் காமராஜ், நிர்வாகி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னோடி விவசாயிகள் தங்க.காசிநாதன், முருகன், ஓய்வூதியர் சங்க பொறுப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மூடப்பட்ட சர்க்கரை ஆலையை திறக்க கோரி பேசினர்.
சி.பி.ஐ. விசாரணை
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மயிலாடுதுறை அருகே மூடப்பட்ட என்.பி.கே.ஆர், ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். ஆலை தொழிலாளர்களுக்கு சரிவர வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். சர்க்கரை ஆலையை நஷ்டத்தில் இயங்க வைத்து மூடுவதற்கு காரணமானவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு டன் கரும்புக்கு ரூ 5 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கணேசன், இளங்கோ, சுந்தர்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story