பேட்டையில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேர் கைது
பேட்டையில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேட்டை,
நெல்லையை அடுத்த பேட்டை கருங்காடு ரோடு கைவினைஞர் தெருவில் ஒரு வீட்டில் 5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். அங்கு விசாரணை செய்ததில் கடன் தொல்லையால் ஒருவர் வீட்டை காலி செய்து சென்று உள்ளார்.
அந்த வீட்டில் பேட்டையை சேர்ந்த மருதப்பன் மகன் வினோத் (வயது 28), கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த முருகையா மகன் தங்கவேல் (27) ஆகிய 2 பேரும் 5 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மேல தாழையூத்து குவாரி அருகே உள்ள சாலையில் ஒரு காரில் சென்றவர்கள் போலீசாரை கண்டவுடன் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதை அடுத்து போலீசார் அந்த காரை சோதனையிட்டதில் 25 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story