மாவட்ட செய்திகள்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தமிழ்ப்புலிகள் கட்சியினர் முற்றுகை + "||" + Tamil Tigers besiege Nellai Corporation office

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தமிழ்ப்புலிகள் கட்சியினர் முற்றுகை

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தமிழ்ப்புலிகள் கட்சியினர் முற்றுகை
தமிழ்ப்புலிகள் கட்சியினர் நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை,

தமிழ்ப்புலிகள் கட்சியினர் நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமை தாங்கினார். குயிலி பேரவை மாவட்ட செயலாளர் மாடத்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த 9 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர். இதையொட்டி அங்கு நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


இதைத்தொடர்ந்து தமிழ்ப்புலிகள் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

1. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மனுதர்ம நூலில் பெண்களை இழிவு செய்யும் கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதாகவும், மனுதர்ம நூலை தடை செய்யக்கோரியும் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
2. பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெண்களை இழிவுபடுத்தும் மனு தர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. நெல்லித்தோப்பு கல்லறை தோட்டத்தில் முதல்-அமைச்சரை கிறிஸ்தவர்கள் முற்றுகை
புதுச்சேரி நெல்லித்தோப்பு கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் முதல்-அமைச்சர் நாராயணசாமியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு, கிளியனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்து பெண்களை இழிவுபடுத்தும் மனுநூலை தடை செய்யக்கோரி வானூர் ஒன்றிய செயலாளர் கலைமாறன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
5. பாளையங்கோட்டையில் கோவில் நிலத்தை மீட்கக்கோரி அறநிலையத்துறை அதிகாரி அலுவலகத்தை இந்து அமைப்புகள் முற்றுகை
பாளையங்கோட்டையில் கோவில் நிலத்தை மீட்கக்கோரி இந்து அறநிலையத்துறை அதிகாரி அலுவலகத்தை இந்து அமைப்பினர் நேற்று திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.