பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் நடந்தது
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி திருவாரூர், திருத்துறைப்பூண்டியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து திருவாரூர் பழைய பஸ் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களி்ன் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற் சங்க தலைவர்கள் முருகையன் (சி.ஐ.டி.யூ.), குணசேகரன் (ஏ.ஐ.டி.யூ.சி), அம்பிகாபதி (காங்கிரஸ்) ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மத்திய தொழிற் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கொரோனா காலத்தில் வேலை நீக்கம், ஊதிய குறைப்பு செய்ய கூடாது. கட்டுமான மற்றும் உடலுழைப்பு தொழிலாளர் வாரியங்களில் தொழிலாளர்கள் கட்டாயமாக தொலைபேசி எண்ணை ஆதார் அட்டையில் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும். நலவாரிய அலுவலகங்களில் புதிய பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் பெறுகின்ற பணியினை உடனே தொடங்கிட வேண்டும். பொது துறைகளை தனியார் மயப்படுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் ஊதிய குறைப்பு, வேலை மறுப்பு நலவாரிய பதிவில் புதிய நிபந்தனைகள் உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து காமராஜர் சிலை அருகே ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலக்குழு உறுப்பினர் உலகநாதன், சி.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொருளாளர் பாண்டியன் ஆகியோர் தலைமையிலும், புதிய பஸ் நிலையம் அருகில் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் நபி ஆகியோர் தலைமையிலும், போக்குவரத்து கழக அலுவலகம் அருகே கிளை செயலாளர்கள் வேதேஸ்வரன் (ஏ.ஐ.டி.யூ.சி.), மதியழகன் (சி.ஐ.டி.யூ.சி.) ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.

Related Tags :
Next Story