மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதி + "||" + Corona has confirmed the infection in 256 people, including a doctor who killed 4 more people

கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதி

கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். டாக்டர் உள்பட 256 பேருக்கு தொற்று உறுதியானது.
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 19 ஆயிரத்து 430 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 256 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் நாகையில் இருந்து குமராட்சிக்கு வந்த 2 பேர், கடலூரை சேர்ந்த டாக்டர், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த செவிலியர், நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 92 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 160 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.


இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்து 686 ஆக உயர்ந்தது. இதில் நேற்று 4 பேர் பலியானார்கள்.

இதன் விவரம் வருமாறு:-

4 பேர் பலி

புவனகிரியை சேர்ந்த 59 வயது பெண் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், புவனகிரியை சேர்ந்த 62 வயது முதியவர் கிண்டி கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், பண்ருட்டியை சேர்ந்த 49 வயது ஆண் கடலூர் அரசு மருத்துவமனையிலும், 65 வயது முதியவர் மேல்மருவத்தூர் மருத்துவமனையிலும் நோய் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அவர்களுக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 212 ஆக உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் 315 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது வரை 17 ஆயிரத்து 968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்த 1,379 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 127 பேர் வெளி மாவட்ட அரசு , தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து 993 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்தது 29 ஆயிரத்து 600 பேர் மீண்டனர்
புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிரடியாக குறைந்து வருகிறது. இதுவரை 29 ஆயிரத்து 600 பேர் கொரோனாவில் இருந்து வீடு திரும்பி உள்ளனர்.
2. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு, உயிரிழப்பு திடீர் குறைவு
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் திடீரென குறைந்து உள்ளது.
3. தேவேந்திர பட்னாவிசுக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
4. மும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டியது
மும்பையில் கொரோனா பாதிப்பு 2½ லட்சத்தை தாண்டி உள்ளது.
5. புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு பாதிப்பு மராட்டியத்தில் கொரோனாவில் இருந்து 89 சதவீதம் பேர் மீண்டனர்
மராட்டியத்தில் புதிதாக 6 ஆயிரத்து 417 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 88.78 சதவீதம் பேர் குணமடைந்தனர்.