குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாசரேத்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நாசரேத் அருகில் உள்ள புன்னை நகரில் நடந்தது. மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், கோட்ட செயலாளர் சக்திவேலன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த தூண்டிகை விநாயகர் கோவில் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோவில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே கோவில் நிர்வாகம் தூண்டிகை விநாயகர் கோவிலை சுத்தம் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
தசரா திருவிழா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழாவின்போது பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தசரா திருவிழாவில் போது கடுமையாக விரதம் இருந்து கோவிலுக்கு வரும் காளி பக்தர்களுக்கும் கோவில் கட்டளைதாரர்கள் 5 பேர்கள் அமர்ந்து சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கோட்ட இணையதள பொறுப்பாளர் சங்கர், மாவட்ட துணைத்தலைவர் கசமுத்து, செயலாளர்கள் அன்பு சுந்தர், பிரபாகரன், சுடலைமுத்து, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வெட்டும் பெருமாள் சின்னத்துரை உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story