டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது பழிவாங்கும் அரசியலில் மோடி அரசு ஈடுபடுகிறது


டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது பழிவாங்கும் அரசியலில் மோடி அரசு ஈடுபடுகிறது
x
தினத்தந்தி 6 Oct 2020 3:18 AM IST (Updated: 6 Oct 2020 3:18 AM IST)
t-max-icont-min-icon

டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது கண்டிக்கத்தக்கது என்றும், பழிவாங்கும் அரசியலில் மோடி அரசு ஈடுபடுகிறது என்றும் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் டி.கே.சிவக்குமார் வீட்டிலும், அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் எம்.பி.யின் வீடு, அலுவலகங்களிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இதை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டமும் நடைபெற்றது.

இந்த நிலையில், டி.கே.சிவக்குமார் வீட்டில் நடந்த சோதனை குறித்து எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

பழிவாங்கும் அரசியல்

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீட்டில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு சி.பி.ஐ. மூலம் சோதனை நடத்தி உள்ளது. இது பழிவாங்கும் அரசியல் செயலாகும். காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் பா.ஜனதா தலைவர்கள் கீழ் மட்ட அரசியலில் ஈடுபடுகிறார்கள். இது அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சமாகும். டி.கே.சிவக்குமார் வீட்டில் நடத்தப்பட்டுள்ள சோதனை கண்டிக்கத்தக்கது. மாநிலத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில், சி.பி.ஐ. மூலம் சோதனை நடத்தி காங்கிரஸ் தலைவர்களின் சக்தியை குறைக்க நடக்கும் சதியாகும். இது மக்களின் கவனத்தை திசை திருப்ப நடக்கும் முயற்சியாகும். சி.பி.ஐ. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மூலம் காங்கிரஸ் தலைவர்களை ஒடுக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story