மாவட்ட செய்திகள்

சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு + "||" + Villagers protest against setting up of cell phone tower in Sivakurunathapuram area

சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
சுரண்டை சிவகுருநாதபுரம் பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கிராமமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
சுரண்டை,

தென்காசி மாவட்ட கலெக்டரின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நேற்று வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மரகதநாதன் தலைமையில், தாசில்தார் முருகு செல்வி முன்னிலையில் நடந்தது.


இதில் சுரண்டை சிவகுருநாதபுரத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். மேலும் சுரண்டை டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் தெருநாய்கள் மக்களை அச்சுறுத்துவதை தடுக்க கோரியும், சுரண்டையில் யூனியன் அலுவலகம் அமைக்க கோரியும், பலபத்திரராமபுரம் கிராமம் மருதாதத்தாள்புரத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட ஓடையை மீட்க கோருதல் இலவச வீட்டுமனை பட்டா கேட்டல் உட்பட 23 மனுக்கள் பெறப்பட்டன.

வாரந்தோறும்...

இம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கூறுகையில்,‘ மனுக்கள் தென்காசி மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காணப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறும்’ என்றார். முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி, மண்டல துணை தாசில்தார் சிவனு பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது புதுவை கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புதுவையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல் பூஜை பொருட்கள் விற்பனையும் களைகட்டியது. பொருட்கள் வாங்க மார்க்கெட் வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
2. கோவில்பட்டியில் மயானத்திற்கு பாதை கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
தோணுகால் ஊராட்சிக்குட்பட்ட படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் மயானத்துக்கு செல்ல பாதை கேட்டு நேற்று கோவில்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. மதசார்பின்மைக்கு மாறி விட்டீர்களா என விமர்சித்து கடிதம் கவர்னருக்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பு
மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு இருக்கும் பிரச்சினையில், மதசார்பின்மைக்கு திடீரென மாறி விட்டீர்களா? என்று விமர்சித்து கவர்னர் எழுதிய கடிதத்துக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
4. வக்கீல் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
வக்கீல் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி நெல்லை கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
5. காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு காதலனை கரம்பிடித்த துமகூரு இளம்பெண் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் துமகூரு இளம்பெண், காதலனை கரம்பிடித்தார். திருமணம் முடிந்தகையோடு இருவரும் பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.