மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 7,500-ஐ தாண்டியது + "||" + In Erode district, the total number of corona victims exceeded 7,500 in 91 days

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 7,500-ஐ தாண்டியது

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா மொத்த பாதிப்பு 7,500-ஐ தாண்டியது
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 500-ஐ தாண்டியது.
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் கொரோனாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 557 ஆக உயர்ந்தது.


ஈரோடு மாநகராட்சி, சித்தோடு, கொடுமுடி, சென்னிமலை, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. புதிதாக நோய் தொற்று ஏற்பட்ட இடங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

95 பேர் பலி

அதேசமயம் நேற்று 116 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தார்கள். இதனால் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 422 ஆக உயர்ந்தது. இதுவரை 1,040 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 95 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தூத்துக்குடியில் 57 பேருக்கு கொரோனா நெல்லை-தென்காசியில் 27 பேர் பாதிப்பு
தூத்துக்குடியில் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நெல்லை-தென்காசியில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
2. தூத்துக்குடியில் 57 பேருக்கு கொரோனா நெல்லை-தென்காசியில் 27 பேர் பாதிப்பு
தூத்துக்குடியில் 57 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். நெல்லை-தென்காசியில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. டெல்டாவில், ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி 170 பேருக்கு தொற்று
டெல்டாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலியாகினர். 170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 148 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 148 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
5. பெரம்பலூர், அரியலூரில் 11 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2 ஆயிரத்து 125 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை