கிருஷ்ணாபுரம் அணை நீர் திறப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின


கிருஷ்ணாபுரம் அணை நீர் திறப்பு கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின
x
தினத்தந்தி 15 Oct 2020 11:41 PM GMT (Updated: 15 Oct 2020 11:41 PM GMT)

கிருஷ்ணாபுரம் அணை நீர் திறக்கப்பட்டதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

பள்ளிப்பட்டு,

ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி கிராமத்தில் கிருஷ்ணாபுரம் அணை உள்ளது. இந்த அணை உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து அணையில் இருந்து கூடுதலாக வரும் தண்ணீரை திறந்து விட ஆந்திர அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 9½ மணி அளவில் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தரைப்பாலங்கள் மூழ்கின

இந்த தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளிப்பட்டு பகுதியில் அதிகாலை 3 மணியளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கீழ் கால்பட்டடை சாமந்த வாடா, நெடியம் போன்ற கிராமங்களில் உள்ள தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

இதனால் இந்த கிராம மக்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

Next Story