பணியில் இருந்து விடுவித்ததால் செல்போன் கோபுரத்தில் ஏறி ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை மிரட்டல்


பணியில் இருந்து விடுவித்ததால் செல்போன் கோபுரத்தில் ஏறி ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 17 Oct 2020 9:09 AM IST (Updated: 17 Oct 2020 9:09 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் கோபுரத்தில் ஏறி ஆம்புலன்ஸ் டிரைவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் செல்போன் கோபுரம் உள்ளது. நேற்று அந்த செல்போன் கோபுரத்தில் ஏறிய ஒருவர் “தான் கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக“ மிரட்டல் விடுத்தார். இதனை கண்ட பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து அந்த நபர் தற்கொலை முயற்சியை கைவிட்டு விட்டு, கீழே இறங்கினார். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் சாமியார்மடம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 42) என்பது தெரிய வந்தது. இவர் ஒப்பந்தம் அடிப்படையில் தொல்லவிளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக ஆம்புலன்ஸ் டிரைவராக பணி பணிபுரிந்து வந்தார். ஒப்பந்தகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார்.

இதனையடுத்து, ராஜேசை போலீசார் சமாதானம் படுத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story