மராட்டியத்தில் ஒரேநாளில் 23,371 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் 180 பேர் உயிரிழப்பு


மராட்டியத்தில் ஒரேநாளில் 23,371 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர் 180 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 21 Oct 2020 9:27 PM GMT (Updated: 21 Oct 2020 9:27 PM GMT)

மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 23 ஆயிரத்து 371 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். மேலும் 180 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

நாட்டிலேயே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பாதிப்பின் அளவு குறைந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று மராட்டியம் முழுவதும் பதிதாக 8 ஆயிரத்து 142 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 17 ஆயிரத்து 658 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் நோய் தாக்கத்தின் காரணமாக மேலும் 180 பேர் இறந்துள்ளனர். இதுவரை 42 ஆயிரத்து 633 பேர் நோய்க்கு பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்து 371 பேர் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களையும் சேர்ந்து இதுவரை மொத்தமாக 14 லட்சத்து 15 ஆயிரத்து 679 பேர் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 1 லட்சத்து 58 ஆயிரத்து 852 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தலைநகர் மும்பை

தலைநகர் மும்பையில் நேற்று மட்டும் புதிதாக 1,609 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் நகரில் நோயால் பதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 869 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 48 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து மும்பையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 912 ஆகி உள்ளது.

புனே நகரில் புதிதாக பாதிக்கப்பட்ட 442 பேரை சேர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 178 ஆகி உள்ளது. மேலும் 3 ஆயிரத்து 876 பேர் இறந்துள்ளனர். இதில் நேற்று உயிரிழந்த 3 பேரும் அடங்குவர்.

Next Story