புதிதாக 23 பேருக்கு தொற்று: நெல்லையில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டியது


புதிதாக 23 பேருக்கு தொற்று: நெல்லையில் கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 23 Oct 2020 11:42 PM GMT (Updated: 23 Oct 2020 11:42 PM GMT)

நெல்லையில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் நேற்று தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேர் உள்பட 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாநகர பகுதியில் 13 பேரும், மானூர், பாப்பாக்குடி பகுதிகளில் தலா 2 பேரும், வள்ளியூர் பகுதியில் 3 பேரும், களக்காடு, சேரன்மாதேவி, ராதாபுரம் பகுதிகளில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 22 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 420 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 62 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 394 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முதியவர் ஒருவர் இறந்தார். இதுவரை மாவட்டத்தில் 208 பேர் இறந்துள்ளனர்.

தென்காசியில் 10 பேர் பாதிப்பு

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 7 ஆயிரத்து 777 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 ஆயிரத்து 474 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 152 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 151 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 51 பேர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 694 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோன்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 70 ஆக உயர்ந்து உள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 497 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளார். இதனால் மாவட்டத்தில் இதுவரை 127 பேர் இறந்து உள்ளனர்.

Next Story