திருப்பட்டூரில் அனுமதி இன்றி வீர முத்தரையர் சிலை வைத்ததால் பரபரப்பு
சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் ஊராட்சி அலுவலகம் அருகில் சுமார் 5 அடி உயரமுள்ள வீர முத்தரையர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக சிறுகனூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
சமயபுரம்,
சிறுகனூர் அருகே உள்ள திருப்பட்டூர் ஊராட்சி அலுவலகம் அருகில் சுமார் 5 அடி உயரமுள்ள வீர முத்தரையர் சிலை வைக்கப்பட்டுள்ளதாக சிறுகனூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், அங்கு உள்ள முக்கிய பிரமுகர்களிடம் போலீஸ் அனுமதியின்றி எவ்வித சிலையும் வைக்கக்கூடாது என்று அறிவுறுத்தினர். மேலும் உடனடியாக அந்த சிலையை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் போலீசாரே சிலையை அப்புறப்படுத்த நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story