ஆரல்வாய்மொழியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடந்தது.
ஆரல்வாய்மொழி,
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடந்தது. ஆரல்வாய்மொழி ரெயில் நிலையத்தில் வழக்கமாக ரெயில் நிற்பதை தடை செய்ததை கண்டித்தும், கேந்திர வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் தமிழ் பாடம் படிப்பதற்கு தடை செய்வதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு தோவாளை தெற்கு ஒன்றிய செயலாளர் வேனுசந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் அனிட்டர் ஆல்வின், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி செயலாளர் ரூபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குமரி கிழக்கு மாவட்ட நாம் தமிழர் செயலாளர் பெல்வின் ஜோ, சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் விஜயராகவன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொருளாளர் ராஜேஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story