திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 8 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வு அமைச்சர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 8 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு தேர்வாகியுள்ளனர் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.
ஆரணி,
ஆரணியை அடுத்த நடுக்குப்பம் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் முதல் - அமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடந்தது.
தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் கண்ணகி , மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள்சீனிவாசன், அரசு வக்கீல் கே.சங்கர், ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், வைகை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பி.ஆர்.ஜி.சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் அரையாளம் வேலு, நாகேஸ்வரிகோபி, ஊராட்சி மன்ற தலைவர் பிரபாவதிதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்யாறு சுகாதார துணை இயக்குனர் டாக்டர் அஜிதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மருத்துவ முகாம் மற்றும் அரசால் கூடுதலாக வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
8 மாணவர்கள் தேர்வு
மேலும் அவர், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பானங்கள் மற்றும் குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு அம்மா பெட்டகம், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்களை சுத்தம் செய்வதற்கான பொருட்கள் அடங்கிய ‘கிட்’ ஆகியவற்றை வழங்கி பேசுகையில், ‘தமிழக முதல் - அமைச்சர் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத மருத்துவ படிப்புக்கு அரசாணை பிறப்பித்து அதில் நமது மாவட்டத்தில் இருந்து 8 மாணவர்கள் மருத்துவ படிப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
அதேபோல மினி கிளினிக் எனும் திட்டத்தை நமது மாவட்டத்தில் செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 38, திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 55 மினி கிளினிக் மையங்கள் செயல்பட உள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.
முகாமில் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பாபுமுருகவேல், மாவட்ட கவுன்சிலர்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடி திருமால், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுரேஷ்பிரகாஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story