திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி 2 பேர் பலி


திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி 2 பேர் பலி
x
தினத்தந்தி 22 Nov 2020 4:23 PM GMT (Updated: 22 Nov 2020 4:23 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலன் இன்றி மேலும் 2 பேர் பலியாகினர்.

திருப்பூர், 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் நாள் ஒன்றின் பாதிப்பு தற்போது 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 1 ஆயிரத்து 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 70 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 பெண்கள் பலி

இதன் காரணமாக தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 763-ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே திருப்பூரில் கொரோனா பலியும் அவ்வப்போது இருந்து வருகிறது. நேற்றும் 2 பேர் பலியாகினர்.

திருப்பூர் மாநகரத்தை சேர்ந்த 87 வயது பெண் ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர் பலியானார். இதுபோல் திருப்பூரை சேர்ந்த 75 வயது பெண் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி பலியானார். தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 206-ஆக உள்ளது. இதில் 47 பெண்கள் அடங்குவர்.

Next Story