இரணியல் அருகே தீவிபத்தில் புதுப்பெண் பலி போலீஸ் விசாரணை


இரணியல் அருகே தீவிபத்தில் புதுப்பெண் பலி போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 26 Nov 2020 6:39 PM IST (Updated: 26 Nov 2020 6:39 PM IST)
t-max-icont-min-icon

இரணியல் அருகே தீ விபத்தில் புதுப்பெண் பலியானார்.

திங்கள்சந்தை, 

இரணியல் அருகே பட்டன்விளை பகுதியை சேர்ந்தவர் கங்காதரன். இவருடைய மனைவி நித்யா (வயது 26). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் ஆனது. தற்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யா வீட்டிற்கு வெளியில் உள்ள விறகு அடுப்பில் மண்எண்ணெய் ஊற்றி தீயை பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக நித்யாவின் நைட்டியில் தீப்பற்றியதாக கூறப்படுகிறது. பின்னர் அவருடைய உடலிலும் தீ குபீரென பிடித்தது.

பலி

இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் புதுப்பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story