அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகின்றனர் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேச்சு


அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகின்றனர் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேச்சு
x
தினத்தந்தி 29 Nov 2020 2:06 AM GMT (Updated: 29 Nov 2020 2:06 AM GMT)

அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசினார்.

நன்னிலம்,

நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அ.தி.மு.க. முகவர்கள் ஆலோசனை கூட்டம் நன்னிலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சரும், மாவட்ட செயலாளருமான காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் கோபால், ஒன்றிய செயலாளர்கள் நன்னிலம் தெற்கு ராம.குணசேகரன், நன்னிலம் வடக்கு அன்பழகன், கொரடாச்சேரி வடக்கு எஸ்.டி.சேகர், குடவாசல் வடக்கு எஸ்.ராஜேந்திரன், ஒன்றியக்குழு தலைவர்கள் நன்னிலம் விஜயலட்சுமி, குடவாசல் கிளாரா செந்தில், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசியதாவது:- எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரது வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது.

களப்பணியாற்ற வேண்டும்

பேரிடர் காலங்களிலும் அ.தி.மு.க. அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து மக்களை பேராபத்தில் இருந்து காப்பாற்றி வருகிறது. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் விரும்பி வருகின்றனர். அ.தி.மு.க.வின் ஆட்சிக்கு மக்களிடத்தில் ஏற்பட்டு இருக்கும் நல்ல பெயரை வாக்குகளாக மாற்றும் பணிகளில் வாக்குச்சாவடி முகவர்கள் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சாமானியர்களுக்கு பாதுகாப்பு தரக் கூடிய இயக்கமாக அ.தி.மு.க. விளங்குகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருவதால் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமர போகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

வலங்கைமான்

இதேபோல வலங்கைமானில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நகர அ.தி.மு.க.வின் முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் காமராஜ் கலந்துகொண்டு பேசினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் சங்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) இளவரசன், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சண்முகம், கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் சம்பத், நகர செயலாளர் குணசேகரன், மாவட்ட மாணவர் அணி இணைச்செயலாளர் இளங்கோவன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடி

முன்னதாக மன்னார்குடி அருகே மரவாக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட கான்கிரீட் மற்றும் பேவர் பிளாக் சாலைகளை அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர் உஷாராணி, மன்னார்குடி ஒன்றிய குழு தலைவர் மனோகரன், முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story