மாவட்ட செய்திகள்

செந்துறை அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு மகள் கண் முன்னே பரிதாபம் + "||" + The wall of the house collapsed due to rain near Sendurai

செந்துறை அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு மகள் கண் முன்னே பரிதாபம்

செந்துறை அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி சாவு மகள் கண் முன்னே பரிதாபம்
செந்துறை அருகே மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 65). இவர்களுக்கு செல்வி (40), அமுதா (35) என 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். ராசு ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், முத்துலட்சுமி அப்பகுதியில் உள்ள குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.


இந்நிலையில் அமுதா, சில நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமியை பார்க்க வந்தார். நேற்று முன்தினம் மதியம் தனது குடிசை வீட்டில் முத்துலட்சுமி, அமுதாவுடன் முறுக்கு தயாரித்துக் கொண்டு இருந்தார். அப்போது கடந்த சில நாட்களாக செந்துறை பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, அவரது வீட்டின் மண் சுவர் திடீரென சரிந்தது. இதனை கண்ட அமுதா தப்பித்து, தனது தாயாரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

சாவு

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த முத்துலட்சுமியை உறவினர்கள் மீட்டு செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் கண் முன்னே சுவர் இடிந்து விழுந்து தாய் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் இருந்து அன்னவாசல் சென்ற தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் திடீர் சாவு
திருச்சியில் இருந்து அன்னவாசல் சென்ற தனியார் பஸ்சை இயக்கிய டிரைவர் திடீரென உயிரிழந்ததால் அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.
2. வேளாங்கண்ணி அருகே டிராக்டர் மோதி பெண் சாவு
வேளாங்கண்ணி அருகே டிராக்டர் மோதி பெண் சாவு.
3. கீரனூரில் ஓட்டுபோட வந்த மூதாட்டி இறந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு
கீரனூரில் ஓட்டுபோட வந்த மூதாட்டி இறந்து விட்டதாக கூறி திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு
திருவள்ளூர் அருகே டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்தடையை சரி செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி மின் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
5. புதையல் இருப்பதாக தோண்டிய குழியில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சாவு
நாசரேத்தில் புதையல் இருப்பதாக தோண்டிய குழியில் சிக்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.