சிறுகனூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம்; 10 பேர் கைது செல்போன், வாகனங்கள் பறிமுதல்


சிறுகனூர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம்; 10 பேர் கைது செல்போன், வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 13 Dec 2020 6:22 AM IST (Updated: 13 Dec 2020 6:22 AM IST)
t-max-icont-min-icon

சிறுகனூர் பகுதியிலுள்ள ஒரு தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக சிறுகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சமயபுரம், 

சிறுகனூர் பகுதியிலுள்ள ஒரு தோப்பு பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக சிறுகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். போலீசாரை கண்டதும் சூதாடிக்கொண்டிருந்தவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்துபிடித்தனர். இதுதொடர்பாக சமயபுரத்தை சேர்ந்த பெரியண்ணா (வயது 51), ராஜ்குமார் (46), ராஜா (43), குமார் (46) திருவானைக்காவலை சேர்ந்த வெங்கடேஷ் (37), பெரம்பலூரை சேர்ந்த சேகர் (46), சக்திவேல் (43), திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த சுந்தர்ராஜ் (47), அரிச்சந்திரா தெருவை சேர்ந்த ராகவன் (25), சிறுகனூரை சேர்ந்த ராஜா (39) ஆகிய 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்கள், 10 செல்போன்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story