அறந்தாங்கியில் நீர்வள ஆதார மைய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முற்றுகை


அறந்தாங்கியில் நீர்வள ஆதார மைய உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 7 Jan 2021 6:39 AM IST (Updated: 7 Jan 2021 6:39 AM IST)
t-max-icont-min-icon

அறந்தாங்கியை அடுத்த கண்ணாகூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இந்த மழையால் கானாடுகாத்தாவில் உள்ள கண்மாய் நிரம்பியது.

அறந்தாங்கி,

அறந்தாங்கியை அடுத்த கண்ணாகூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இந்த மழையால் கானாடுகாத்தாவில் உள்ள கண்மாய் நிரம்பியது. தண்ணீர் அதிக அளவில் நிரம்பியபோதும், கண்மாய் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் கண்மாய் உடைந்து வயலுக்குள் தண்ணீர் பாய்ந்து சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கண்மாயை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று அறந்தாங்கி நீர்வள ஆதாரமைய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கண்மாய் தண்ணீரை திறந்து விடக்கோரி, அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கண்மாயை திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே அந்த கண்மாய் நீரும் திறந்து விடப்பட்டது. அந்த தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

Next Story