மாவட்ட செய்திகள்

கோட்டைப்பட்டினம் அருகே வடிகால் வாய்க்கால் அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் + "||" + Villagers block road near Kottaipattinam demanding construction of drainage canal

கோட்டைப்பட்டினம் அருகே வடிகால் வாய்க்கால் அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கோட்டைப்பட்டினம் அருகே வடிகால் வாய்க்கால் அமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கோட்டைப்பட்டினம் அருகே வடிகால் வாய்க்கால் அமைக்க கோரி கிராமமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டைப்பட்டினம்,

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே இரளிவயல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மழை பெய்தால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.


இதனால் வடிகால் வாய்க்கால் அமைத்துதர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுவதால் அதனையும் சரி செய்து தர கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு இப்பகுதியில் கனமழை பெய்தது.

மேலும் வடிகால் வாய்க்கால் இல்லாததால் தண்ணீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராமமக்கள் திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் மற்றும் வருவாய்த்துறையினர், ஊராட்சி மன்ற துணை தலைவர் அக்பர் அலி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கைகள் விரைவாக சரிசெய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கிராமமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மணப்பாறையில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு கோரி அரை நிர்வாண கோலத்தில் விவசாயிகள் சாலை மறியல்
மணப்பாறையில் சேதமடைந்த பயிர்களுக்கு விவசாயிகள் இழப்பீடு கேட்டு அரை நிர்வாண கோலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. கடத்தூர் அருகே கட்டிட மேஸ்திரி அடித்துக்கொலை உறவினர்கள் சாலை மறியல்
கடத்தூர் அருகே கட்டிட மேஸ்திரி அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. நிவாரணம் வழங்கக்கோரி அழுகிய பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியல் சிதம்பரம் அருகே பரபரப்பு
சிதம்பரம் அருகே நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் அழுகிய பயிர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; தொழிலாளி பலி ஆம்புலன்ஸ் ஊழியர்களை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார். பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்களை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. நெல்லையில் சாலை விரிவாக்க பணிக்காக கடை, வீடுகளை அகற்ற நோட்டீஸ் நெடுஞ்சாலை துறையினர் அனுப்பினர்
நெல்லையில் சாலை விரிவாக்க பணிக்காக கடைகள், வீடுகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் வழங்கினர்.