மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா + "||" + Corona virus outbreak in Karnataka: CM Eduyurappa

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது: கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருப்பதகா எடியூரப்பா கூறினார்.
முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று டெல்லி செல்லும் முன்பு பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அரசியல் நிலவரம்
நான் டெல்லி சென்று உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பா.ஜனதா கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். தற்போது மாநிலத்தில் உள்ள அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க இருக்கிறேன். சமீபத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலில் பா.ஜனதா பெரிய வெற்றி பெற்றது. அடுத்த ஒரு மாதத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

இதற்கு வேட்பாளர்களின் பெயரை இறுதி செய்ய வேண்டியுள்ளது. இந்த விஷயங்கள் குறித்து நான் மேலிட தலைவர்களிடம் ஆலோசிக்க உள்ளேன். கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது. நாங்கள் அனைத்து விதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். மந்திரிசபை விரிவாக்கம் குறித்தும் விவாதிக்க உள்ளேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

ரேணுகாச்சார்யா
பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, முனிரத்னா, பசனகவுடா பட்டீல் யத்னால், அரவிந்த் லிம்பாவளி, ரேணுகாச்சார்யா, எஸ்.ஆர்.விஸ்வநாத், எம்.எல்.சி.க்கள் ஆர்.சங்கர், எம்.டி.பி.நாகராஜ், சி.பி.யோகேஷ்வர் ஆகியோரின் பெயர்கள் மந்திரி பதவிக்கு அடிபடுகின்றன. எச்.விஸ்வநாத் எம்.எல்.சி.க்கு மந்திரி பதவி வழங்க கர்நாடக ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சி.டி.யை காட்டி மிரட்டி மந்திரி பதவி பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் உள்ளதா? எடியூரப்பாவுக்கு சித்தராமையா கேள்வி
சி.டி.யை காட்டி மிரட்டி மந்திரி பதவி பெற்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் எடியூரப்பாவுக்கு உள்ளதா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
2. கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள் விரிவாக்கம்; முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக மந்திரிசபை நாளை மறுநாள்(புதன்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக 7 பேர் மந்திரிகளாக பதவி ஏற்பார்கள் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
3. பா.ஜனதா மேலிடம் திடீர் அழைப்பு; முதல்-மந்திரி எடியூரப்பா இன்று டெல்லி பயணம்; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து தலைவர்களுடன் ஆலோசனை
பா.ஜனதா மேலிடத்தின் திடீர் அழைப்பை தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லி புறப்பட்டு செல்கிறார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து அவர், தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
4. சுதந்திர தினத்தன்று, பெங்களூருவில் முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றுகிறார்
முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டதுடன், அவருக்கு வீட்டு தனிமையிலும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினவிழாவுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடியை ஏற்ற உள்ளார்.