மாவட்ட செய்திகள்

ஊத்தங்கரையில், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம் + "||" + In Uttaranchal, Congress party general secretary Priyanka Gandhi's birthday celebration

ஊத்தங்கரையில், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்

ஊத்தங்கரையில், காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் ஆகியோரின் பிறந்த நாள் விழா, ஊத்தங்கரை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
ஊத்தங்கரை, 

காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி. டாக்டர் செல்லக்குமார் ஆகியோரின் பிறந்த நாள் விழா, ஊத்தங்கரை வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனுமன் தீர்த்தம் அனுமந்த் ஈஸ்வரர் கோவிலில் பிரியங்கா காந்தி மற்றும் டாக்டர் செல்லக்குமார் பெயரில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காட்டேரி ஊராட்சி தாதனூர் நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன குடும்பங்களுக்கு இனிப்பு, அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவுப்பொருட்கள் தொகுப்பை வழங்கினர். விழாவிற்கு காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் ஜே.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நடராஜன், மாவட்ட துணைத்தலைவர் ராமச்சந்திரன், வட்டார தலைவர் ரவிச்சந்திரன், நகர தலைவர் விஜயகுமார், வட்டார பொருளாளர் திருமால், முன்னாள் வட்டாரத் தலைவர் அயோத்தி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, தகவல் தொழில்நுட்ப பிரிவு அப்துல்கனி மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள், ஒன்றிய குழு உறுப்பினர் கோவிந்தசாமி, ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு நல உதவிகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
2. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடினார்கள்.
3. நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
4. ‘குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ - சசி தரூர் யோசனை
குடியரசு தினவிழா கொண்டாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சசி தரூர் யோசனை தெரிவித்துள்ளார்.
5. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
அமலாபால் வருடம் தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டலில் கொண்டாடுவார்.