வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 50 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 50 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2021 5:19 AM GMT (Updated: 14 Jan 2021 5:19 AM GMT)

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் 50 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், டெல்லியில் போராடி விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப் படுத்துகிற மத்திய அரசை கண்டித்தும் உழவர் திருநாளான பொங்கலை புறக்கணித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றிய குழுவின் சார்பில் 50 இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

வேலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் எஸ். தம்புசாமி பேசினார். மணலியில் கிளை செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் எஸ்.சாமிநாதன் பேசினார். கச்சனத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் மாதவவேலன் தலைமையிலும், ஆலத்தம்பாடியில் கிளை செயலாளர் மாதவன் தலைமையிலும், கோமலில் ஒன்றிய குழு உறுப்பினர் பி. ராமச்சந்திரன் தலைமையிலும், அம்மனூரில் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமாரசாமி தலைமையிலும் பொன்னிரையில் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். பாலகுரு தலைமையிலும், ஆண்டாங்கரையில் கிளை செயலளார் உபேந்திரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

50 இடங்களில் நடந்தது

மேலும் திருத்தங்கூர், கீர்க்களூர், வல்லம் உள்பட திருமருகல் ஒன்றியத்தில் 50 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

Next Story