விழுப்புரம் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்


விழுப்புரம் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Jan 2021 5:14 AM GMT (Updated: 17 Jan 2021 5:14 AM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் பெட்ரோல் ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம், 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2020-21-ம் நிதியாண்டிற்கு கால்களில் முழுமையாக வலு இல்லாத முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை இயக்கும் வலுவுள்ள மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்ப படிவம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப படிவத்தை அலுவலக வேலை நாட்களில் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 ஆகியவற்றை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நாளை (திங்கட்கிழமை) மாலை 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story