7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது


பாலாஜி
x
பாலாஜி
தினத்தந்தி 17 Jan 2021 10:39 PM GMT (Updated: 17 Jan 2021 10:39 PM GMT)

காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 40). இவர் மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மதுரையில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் மதுரையில் குடும்பத்துடன் குடியிருந்து வந்த பாலாஜி கொரோனா காரணமாக காரைக்குடியில் உள்ள தனது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர் ஒருவரின் 7 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது பற்றி உன் அம்மாவிடம் சொன்னால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வார் என்று மிரட்டி சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமியின் வீட்டிற்கு பாலாஜி சென்றார். அவரை பார்த்ததும் பயத்தில் சிறுமி வீட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டாள். இதை பார்த்த பெற்றோர் சிறுமியை அழைத்து விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சிறுமி கண்ணீருடன் கூறி இருக்கிறாள். உடனே பெற்றோர் பாலாஜியை பிடித்து அடித்து காரைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கத்திடம் ஒப்படைத்து உள்ளனர். காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் உத்தரவின் பேரில் பாலாஜியை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவகி போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story