திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்


திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2021 2:54 AM GMT (Updated: 18 Jan 2021 2:54 AM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

திண்டுக்கல், 

திண்டுக்கல்லில், அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு அ.தி.மு.க. மாநில அமைப்பு செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான மருதராஜ் தலைமை தாங்கி, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பொதுமக்களுக்கு இனிப்பு

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.கே.டி.நடராஜன், பிரேம்குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் ராஜ்மோகன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், பகுதி செயலாளர்கள் சேசு, மோகன், சுப்பிரமணி, முரளிதரன், அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க மண்டல செயலாளர் நாராயணசாமி, வக்கீல் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள ஸ்கீம் ரோட்டில் எம்.ஜி.ஆர்.உருவப்படத்திற்கு அ.தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட தலைவர் திருமாறன், கிழக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்தையா, இணைச்செயலாளர் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் முனுசாமி, நாகராஜ், சின்னு, முத்து, உதயகுமார், ரவிச்சந்திரன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல்

கொடைக்கானலில் அ.தி.மு.க. சார்பில் மூஞ்சிக்கல், நாயுடுபுரம், அண்ணாசாலை, அண்ணா நகர் உள்பட பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க. நகர செயலாளர் எம்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் ஜான் தாமஸ், துணை செயலாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பிரதிநிதி ஆவின் பாரூக், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைசெயலாளர் பிச்சை, நகர இளைஞரணி செயலாளர் ராபின், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் சுதாகர்பிரபு, ராஜா, ஜெயசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொடைக்கானல் மேல்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேல்மலை ஒன்றிய செயலாளர் வி.கே.முருகன் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பள்ளங்கி கிராமத்தில் முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் பொன்னுத்துரை, மாட்டுப்பட்டியில் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சிவாஜி ஆகியோர் எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர்.

கோபால்பட்டி

சாணார்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா சாணார்பட்டி, வேம்பார்பட்டி, ராமராஜபுரம், கோபால்பட்டி, கொசவபட்டி, நொச்சியோடைப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் கொண்டாடப்பட்டது. கோபால்பட்டியில் நடைபெற்ற விழாவுக்கு சாணார்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் ராமராஜ் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் அரிஹரன், சுப்புத்தாய், கோம்பைபட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிலுவத்தூர், கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் வி.சுப்பிரமணி தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் கே.சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நத்தம்

நத்தம் பஸ் நிலையம் அருகில் நடந்த விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் கண்ணன் தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் நகர செயலாளர் சிவலிங்கம், பேரவை செயலாளர் சேக்தாவூது, ஒன்றிய அவைத்தலைவர் பிறவிக்கவுண்டர், பொருளாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி மோகன் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம்

ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் அருகே எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஒட்டன்சத்திரம் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி.நடராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, நகர செயலாளர் நடராஜன், மேற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.பழனிவேல், தொப்பம்பட்டி அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பன் என்ற கே.கே. கருப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பழனி

பழனி பெரியப்பாநகரில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு பழனி அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் முன்னாள் எம்.பி. குமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, குப்புசாமி, ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, ஆர்.எம்.டி.சி மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வடமதுரையில் அ.தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன் எம்.ஜி.ஆர். உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அ.தி.மு.க நகர துணை செயலாளர் ஜானகிராமன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஆண்டவர், எம்.ஜி.ஆர். மன்ற நகர தலைவர் சேதுராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை

நிலக்கோட்டை நால்ரோடு அருகே எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தேன்மொழிசேகர், முன்னாள் எம்.பி. உதயகுமார், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் தண்டபாணி, நகர செயலாளர் சேகர், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மூர்த்தி, முன்னாள் துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஆலமரத்துப்பட்டி, பிள்ளையார்நத்தம், சின்னாளபட்டி ஆகிய ஊர்களில் எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா நடந்தது. இதற்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கிரஷர் பாலு, மாவட்ட துணைச் செயலாளர் டி.ஆர். விஜயபாலமுருகன், சின்னாளபட்டி நகர செயலாளர் கணேஷ்பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். காந்திகிராமத்தில் எம்.ஜி.ஆர்.உருவப்படத்திற்கு ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி பாலாஜி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Next Story