மாவட்ட செய்திகள்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கோர்ட்டு என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆட்சேபனை இல்லை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி + "||" + No objection to any action taken by the Court regarding the release of Perarivalan EVKS Ilangovan Interview

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கோர்ட்டு என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆட்சேபனை இல்லை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கோர்ட்டு என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆட்சேபனை இல்லை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கோர்ட்டு என்ன நடவடிக்கை எடுத்தாலும் ஆட்சேபனை இல்லை என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்துக்கு ராகுல்காந்தி எம்.பி. வருகை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.

அப்போது பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

தமிழக மக்களை பொறுத்தவரை பிரதமர் மோடி மீது கடும் கோபத்தில் உள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் அந்த கோபத்தை வெளிப்படுத்தினார்கள். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் மோடிக்கு எதிராக அவர்கள் வாக்களிப்பார்கள். மோடியின் ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது. விவசாயிகள் கொட்டும் பனி, கடும் வெயிலில் மாதக்கணக்கில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் குறைகளை கேட்கவில்லை. சரக்கு மற்றும் சேவை வரியால் சிறு தொழில்கள் முடங்கி, வியாபாரிகள் கடும்பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் மக்கள் பிரதமர் மோடி மீது கடும் அதிருப்தியடைந்துள்ளார்கள். இந்த ஆட்சியில் எது வளர்ந்து இருக்கிறது என்றால் அது மோடியின் தாடி மட்டும்தான்.


இந்த சூழலில் ராகுல்காந்திதான் இந்தியாவை மீட்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள். அவர்கள் நம்புகின்ற தலைவராக ராகுல்காந்தி இருக்கிறார். எனவே அவரது தமிழக சுற்றுப்பயணம் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ஆட்சேபனை இல்லை

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக கோர்ட்டு என்ன முடிவு எடுத்தாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது.

காங்கிரஸ் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. பொதுவாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வது இயல்பு. காங்கிரஸ் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் ஆசை. காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறோம். ஆனால் தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை. எல்லா கட்சிகளும் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்று கூறுவார்கள். பா.ம.க.வினர் ஆட்சிக்கு வருவோம் என்று கூறுவார்கள்.

சரத்குமாரிடம் கேட்டால் அவரும் ஆட்சி அமைப்போம் என்பார். அதுபோல ஜெகத்ரட்சகனும் தங்கள் கட்சியை முன்னிலைப்படுத்தி பேசியிருப்பார்.

தற்போதைய சூழலில் சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலா நல்லபடியாக குணம் அடைந்து வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் திருக்கடையூரில், தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று திருக்கடையூரில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
2. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘பா.ஜ.க.வில் விருப்ப மனு வினியோகம் கிடையாது’
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘பா.ஜ.க.வில் விருப்ப மனு வினியோகம் கிடையாது’ எல்.முருகன் பேட்டி.
3. சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்ட ரீதியான முயற்சிகளை செய்து வருகிறோம் டி.டி.வி. தினகரன் பேட்டி
சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து சட்டரீதியான முயற்சிகளை செய்து வருவதாக டி.டி.வி. தினகரன் கூறினார்.
4. ‘முதல் நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சு எடுபடும்’ இந்திய துணை கேப்டன் ரஹானே பேட்டி
முதலாவது டெஸ்டில் தடுமாற்றம் கண்ட இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே சென்னையில் நேற்று அளித்த பேட்டியில்,‘ சொந்த மண்ணில் 2 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறோம்.
5. தமிழக தேர்தல் பணிக்கு கூடுதல் ராணுவம் ஓட்டுப்பதிவு நேரம் நீட்டிப்பு தலைமை தேர்தல் கமிஷனர் பேட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும், தேர்தல் பணியில் கூடுதல் ராணுவம் ஈடுபடுத்தப்படும், ஓட்டுப்பதிவு நேரம் நீட்டிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை