மாவட்ட செய்திகள்

திருத்தணியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை; திருமணமான 6 மாதத்தில் பரிதாபம் + "||" + Teenager commits suicide by drinking poison Awful in 6 months of marriage

திருத்தணியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை; திருமணமான 6 மாதத்தில் பரிதாபம்

திருத்தணியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை; திருமணமான 6 மாதத்தில் பரிதாபம்
திருத்தணியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கருத்து வேறுபாடு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கம்பன் நகரில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 33). அரசு பஸ் டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முதல் மனைவி குடும்பத்தகராறில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று சென்று விட்டார். அதன் பிறகு சுரேஷ் 6 மாதத்திற்கு முன் திருத்தணி அருகே தாழவேடு என்ற கிராமத்தை் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகள் ராதிகா (19) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 3 மாதம் ஆன நிலையில் ராதிகாவுக்கும் சுரேஷுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு ராதிகா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தற்கொலை
இந்தநிலையில் நேற்று ராதிகா வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். இதை கண்ட பெற்றோர் அவரை சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ராதிகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ராதிகாவின் தந்தை வெங்கடேசன் திருத்தணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் முடிந்து 6 மாதத்தில் ராதிகா தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பரிதாபம்: தூக்குப்போட்டு பெண் தற்கொலை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. கடன் தொல்லையால் விரக்தி செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து இளம்பெண் தற்கொலை
கடன் தொல்லையால் விரக்தி அடைந்த இளம்பெண், செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
3. வளர்த்து ஆளாக்கிய மகன்கள் கைவிட்டதால் விரக்தி காப்பகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
வளர்த்து ஆளாக்கிய மகன்கள் கைவிட்டதால் விரக்தி அடைந்த முதியவர், காப்பகத்தில் உள்ள குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டதால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படத்தை வெளியிட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
5. வளர்த்து ஆளாக்கிய மகன்கள் கைவிட்டதால் விரக்தி காப்பகத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
வளர்த்து ஆளாக்கிய மகன்கள் கைவிட்டதால் விரக்தி அடைந்த முதியவர், காப்பகத்தில் உள்ள குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.