மாவட்ட செய்திகள்

பூலாம்பட்டி அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை: தந்தை, 2 மகன்கள் கைது + "||" + Farmer stabbed to death near Poolampatti: Father, 2 sons arrested

பூலாம்பட்டி அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை: தந்தை, 2 மகன்கள் கைது

பூலாம்பட்டி அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை: தந்தை, 2 மகன்கள் கைது
பூலாம்பட்டி அருகே கட்டையால் தாக்கி விவசாயி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தந்தை மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே உள்ள சித்தனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 45), விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சேட்டு (50). இவருடைய மகன்கள் ரவி (29), லட்சுமணன் (26). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். 

அப்போது பெரியசாமி வீட்டில் வளர்த்து வரும் நாய் அவர்களை பார்த்து குரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ரவி, லட்சுமணன் ஆகியோர் பெரியசாமியிடம் சென்று இதுதொடர்பாக தகராறு செய்தனர். அப்போது அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ரவி, லட்சுமணன், சேட்டு ஆகியோர் சேர்ந்து பெரியசாமியை கட்டையால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பூலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் பெரியசாமியை கட்டையால் தாக்கி கொலை செய்ததாக சேட்டு மற்றும் அவருடைய மகன்கள் ரவி, லட்சுமணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரியபாளையம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடிய தாய்-மகள் கைது
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கொசவன்பேட்டை ஊராட்சியில் உள்ள காமாட்சி நகரில் வசித்து வருபவர் குப்பன்.
2. அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று ஆர்ப்பாட்டம்; தொல்.திருமாவளவன் அறிவிப்பு
அரக்கோணம் இரட்டை கொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
3. வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம்
வாலிபர் கொலையில் 3 பேர் கைது கஞ்சா கேட்டு தொல்லை கொடுத்ததால் கொன்றது அம்பலம்.
4. நவநிர்மாண் சேனா தலைவரை சுட்டுக்கொன்றவர் கைது; தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகம் சூறை; பலத்த போலீஸ் பாதுகாப்பு
நவநிர்மாண் சேனா தலைவரை சுட்டுக்கொன்றவர் உத்தரப்பிரதேசத்தில் சிக்கினார்.
5. டெல்லியில் 118-வது நாளாக விவசாயிகள் போராட்டம்; 3 மாநிலங்களில் சுங்க கட்டண இழப்பு ரூ.815 கோடி
டெல்லியில் விவசாயிகள் 118-வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் 3 மூன்று மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டண இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.