காஞ்சீபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோரிடம் இருந்து 1,593 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோரிடம் இருந்து 1,593 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 3 April 2021 12:58 AM GMT (Updated: 3 April 2021 12:58 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோரிடம் இருந்து 1,593 தபால் வாக்குகளும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இருந்து 363 தபால் வாக்குகளும் பெறப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் 2021-க்கு 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் வீட்டில் இருந்தபடி தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்துள்ள நபர்களுக்கு இந்திய தேர்தல் ஆணைய விதிகளின்படி அஞ்சல் வழியில் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு குழுக்கள் மார்ச் 28, 30 ஆகிய நாட்களில் தபால் வாக்கு வழங்கவும், அந்த நாட்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் வீட்டில் இல்லாதவர்களுக்கு மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய நாட்களில் மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டு தபால் வாக்கு பெறப்பட்டது.

1,956 வாக்குகள்

ஏப்ரல் 1-ந்தேதி வரை 80 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இருந்து 1,593 வாக்குகள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடமிருந்து 363 வாக்குகளும் பெறப்பட்டு மொத்தம் 1,956 வாக்குகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story