ராமநாதபுரத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் வெற்றி உறுதி முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரச்சாரம்


ராமநாதபுரத்தில் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் வெற்றி உறுதி முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பிரச்சாரம்
x
தினத்தந்தி 3 April 2021 6:16 AM GMT (Updated: 3 April 2021 6:16 AM GMT)

காதர் பாட்சா முத்துராமலிங்கம் தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் வடக்குத் தெரு பகுதியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளித்த பொதுமக்கள் செங்கோல் வழங்கி வாழ்த்தினர். மந்தை மாரியம்மன் கோவில் பகுதியில் கிரேன் உதவியுடன் ராட்சத மலர் மாலையை அணிவித்து வீரவாள் வழங்கி ஆதரவு தெரிவித்தனர். ஆர்.எஸ்.மடை கிராமத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளருமான ராஜகண்ணப்பன் தலை மையில், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி முன்னிலையில், காதர் பாட்சா முத்துராமலிங்கத்தை ஆதரித்து திருப்புல் லாணி ஒன்றிய பகுதியில் தெற்கு மல்லல், திருஉத்தர கோசமங்கை, கொம்பூதி, வேளானூர், வண்ணங் குண்டு, பத்திராதரவை, நயினாமரைக்கான், ரெகு நாத புரம் மற்றும் மண்டபம் ஒன்றியத்திற்கு உட்பட்ட உச்சிப் புளி, பிரப்பன்வலசை, நொச்சியூரணி, பம்பன், தங்கச்சி மடம், ராமேசுவரம் பேய்க்கரும்பு உள்பட பல கிராமங்களில் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்தனர்.அப்போது முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:-

 20 ஆண்டுகளுக்கு பின்னர் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. இதனால் கட்சியினர் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வென்று ஸ்டாலின் முதல்-அமைச் சராவது உறுதி. அதே போல மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் காதர்பாட்சா முத்துராம லிங்கம் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு பேசினார். பிரச்சாரத்தின் போது தி.மு.க,காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக உடன் சென்றனர்.

Next Story