திருவாரூரில் முககவசம் அணியாத 80 பேருக்கு அபராதம்


திருவாரூரில் முககவசம் அணியாத 80 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 11 April 2021 2:11 PM GMT (Updated: 11 April 2021 2:11 PM GMT)

திருவாரூரில் முககவசம் அணியாத 80 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் விதிகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருவாரூர், 

கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரிப்பதால் அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்து நேற்று முதல் நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன்படி பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதமும் விதிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அபராதம்

இந்நிலையில் நேற்று திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சண்முகம் தலைமையில் துப்பரவு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் நகர் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பொது இடங்களில் முககவசம் அணியாத 80 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.16 ஆயிரம், சமூக இடைவெளியை பின்பற்றாத வணிக நிறுவனம், திரையரங்குகளுக்கு ரூ.3 ஆயிரமும் என மொத்தம் ரூ.19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் நகராட்சி வாகனம் மூலம் கொரோனா விழிப்புணர்வு முன்எச்சரிக்கை குறித்தும், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்யப்பட்டது.

நன்னிலம்

இதைப்போல நன்னிலம் பகுதியில் போலீசார் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர் கங்களாஞ்சேரி அருகே நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா மற்றும் போலீசார் வாகன சோதனையின் போது முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். இதில் 50 பேரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபாராதம் விதிக்கப்பட்டது

மேலும் சமூக இடைவெளி பின்பற்றாத டீக்கடை மற்றும் ஆம்னி பஸ் மற்றும் ஆட்டோ உரிமையாளரிடம் ரூ.500 வீதம் 10 பேரிடம் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

Next Story