மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டையில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.காந்தி வெற்றி தொடர்ந்து 4-வது முறையாக தக்கவைத்தார் + "||" + In Ranipet DMK Candidate R. Gandhi wins

ராணிப்பேட்டையில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.காந்தி வெற்றி தொடர்ந்து 4-வது முறையாக தக்கவைத்தார்

ராணிப்பேட்டையில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.காந்தி வெற்றி தொடர்ந்து 4-வது முறையாக தக்கவைத்தார்
ராணிப்பேட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆர்.காந்தி 16,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவர் 4-வது முறையாக இந்த தொகுதியை தன் வசப்படுத்தி உள்ளார்.
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆர்.காந்தி, அ.தி.மு.க. சார்பில் எஸ்.எம்.சுகுமார், அ.ம.மு.க. சார்பில் ஜி.வீரமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் வி.சைலஜா, மக்கள் நீதி மய்யம் சார்பில் எம்.ஆதம்பாஷா உள்பட 14 பேர் போட்டியிட்டனர்.

ராணிப்பேட்டை தொகுதி வாக்கு எண்ணிக்கை வாலாஜா அருகே தென் கடப்பந்தாங்கலில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பகவத் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள், மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் சில சுற்றுகள் மட்டும் பரபரப்புடன் காணப்பட்டது. அதன் பிறகு தி.மு.க. வேட்பாளர் ஆர்.காந்தியே முன்னிலை பெற்று வந்தார். தொடர்ந்து அனைத்து சுற்றுகளிலும் முன்னணியில் இருந்து வந்த ஆர்.காந்தி 27-வது சுற்றில் வெற்றி பெற்றார்.

வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள் - 2,65,676

பதிவான வாக்குகள் -2,07,782

செல்லாதவை : 320

ஆர்.காந்தி (தி.மு.க.) - 1,03,291

எஸ்.எம்.சுகுமார் (அ.தி.மு.க.) - 86,793

வி.சைலஜா (நாம் தமிழர் கட்சி) - 10,125

எம்.ஆதம்பாஷா (மக்கள் நீதி மய்யம்) - 2,762

ஜி.வீரமணி (அ.ம.மு.க.) - 637

ஏ.யுவராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) - 669

எஸ்.ஜெயகுமார் (சுயே) - 425

டாக்டர் கே.சத்யராஜ் (தமிழ்நாடு இளைஞர் கட்சி) - 275

ஏ.மணிகண்டன் (சுயே) - 268

ஏ.மன்சூர் பாஷா (சுயே) - 194

எஸ்.யுவராஜ் (சுயே) - 107

எஸ்.காந்தி (சுயே) - 64

என்.சுகுமார் (சுயே) - 63

கே.சக்திவேல்நாதன் (சுயே) - 48

நோட்டா - 1,632.

4-வது முறையாக

தி.மு.க.‌ வேட்பாளர் ஆர்.காந்தி‌ 16,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் ஏற்கனவே இந்த தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல் உள்பட 3 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் ராணிப்பேட்டை தொகுதியை 4-வது முறையாக தன் வசம் வைத்துள்ளார்.

வெற்றி பெற்ற ஆர்.காந்திக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் இளம்பகவத், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் கிடைத்திட எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் துறையூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் பிரசாரம்
தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் கிடைத்திட எனக்கு மீண்டும் வாய்ப்பு தாருங்கள் என்று துறையூர் ெதாகுதி தி.மு.க. வேட்பாளர் ஸ்டாலின் குமார் பிரசாரம் செய்தார்.
2. முசிறி தொகுதி தி.மு.க. வேட்பாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு
முசிறி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆதரவாளர்களுடன் கிராமம், கிராமமாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க. வேட்பாளர் காடுவெட்டி ந.தியாகராஜன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டுபேசினார்.
3. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை விராலிமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் வாக்குறுதி
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விராலிமலை தொகுதி தி.மு.க.வேட்பாளர் பழனியப்பன் வாக்குறுதி அளித்துள்ளார்.
4. ஸ்ரீரங்கம் தொகுதி, அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டி தீவிர வாக்கு சேகரிப்பு
ஒவ்வொரு ஊராட்சி பகுதியிலும் உள்ள முக்கிய தேவைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்று வேன், என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
5. ராணிப்பேட்டையில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்
ராணிப்பேட்டை காந்தி சாலையில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நினைவு தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் முகமதுஜான் எம்.பி. கலந்துகொண்டு, எம்.ஜி.ஆா். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.