காஞ்சீபுரம் மீன் சந்தையில் குவியும் பொதுமக்களால் கொரோனா தொற்று அபாயம்


காஞ்சீபுரம் மீன் சந்தையில் குவியும் பொதுமக்களால் கொரோனா தொற்று அபாயம்
x
தினத்தந்தி 10 May 2021 6:08 AM GMT (Updated: 10 May 2021 6:08 AM GMT)

காஞ்சீபுரம் மீன் சந்தையில் குவியும் பொதுமக்களால் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சீபுரம், 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை சிறிதும் கருத்தில் கொள்ளாமல், எந்தவித அச்சமும் இன்றி பொது மக்கள் சுற்றி வருகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நேற்று முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.

மீ்ன் வாங்க குவிந்தனர்

இதனால் காஞ்சீபுரம் ரெயில் நிலையம் அருகில் உள்ள மீன் சந்தையில் கொரோனா குறித்து எந்த வித அச்சமும் இன்றி ஏராளமான அசைவ பிரியர்கள் சமூக இடைவெளியை மறந்து மீன் வாங்க குவிந்தனர்.மீன் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் போலீசார் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க அறிவிப்பு வெளியிட்டும் பொதுமக்கள் அருகருகே நின்று மீன் வாங்கி செல்வதை காணமுடிந்தது.

மீன் சந்தையில் குவியும் பொதுமக்களால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

Next Story