உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி


உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி
x
தினத்தந்தி 13 May 2021 10:41 PM IST (Updated: 13 May 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்கள் நிதி அளித்து உதவ வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

கோவை, 

இந்த நிலையில், கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகள் பிரணவிகா (வயது 7) தான் உண்டியலில் பல மாதங்களாக சிறுக, சிறுக சேமித்து வைத்த ரூ.1,516-ஐ முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்தார். இதையடுத்து அவர், தனது தந்தையுடன் ஆர்.எஸ்.புரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்று முதல்-அமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு தான் சேமித்த பணத்தை அனுப்பினார். இதுகுறித்து பழனிச்சாமி கூறும்போது, பட்டு துணி வாங்குவதற்காக உண்டியலில் சேமித்த நாணயங்களை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க பிரணவிகா முடிவு செய்தார். அதன்படி அந்த பணத்தை அனுப்பினோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story