கொடைக்கானலில் கொரோனா தடுப்பூசி முகாம்
கொடைக்கானலில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் அப்சர்வேட்ரியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகராட்சி நகர் நல அலுவலர் (பொறுப்பு) சுப்பையா முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளரும், முன்னாள் நகரசபை தலைவருமான முகமது இப்ராகிம், முன்னாள் நகரசபை துணை தலைவர்கள் தங்கராஜ், செல்லத்துரை மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முகாமை நகராட்சி ஆணையாளர் நாராயணன், தாசில்தார் மோகன் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) நாயுடுபுரம் பகுதியில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
Related Tags :
Next Story