கூத்தாநல்லூர் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கூத்தாநல்லூர் பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.
கூத்தாநல்லூர்,
கொரோனா 2-வது அலை மிகவும் தீவிரமாகி வருவதால், நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இந்த (மே) மாதம் வரை பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கூத்தாநல்லூரில், நேற்று ஒரே நாளில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் 4 ஆக அதிகரித்து உள்ளது.
கிருமி நாசினி தெளிப்பு
கூத்தாநல்லூர் பகுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி ஆணையர் லதா ஆலோசனையின் பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி நேற்று கூத்தாநல்லூரில் உள்ள 24 வார்டுகள் மற்றும் லெட்சுமாங்குடி கடைவீதி சாலை உள்ளிட்ட இடங்களில் சுகாதார ஆய்வாளர் அருண்குமார், சுகாதார மேற்பார்வையாளர் வாசுதேவன் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

Related Tags :
Next Story