நன்னிலம் ரேஷன் கடையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா? போலீசார் கண்காணிப்பு


நன்னிலம் ரேஷன் கடையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா? போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 28 May 2021 11:57 PM IST (Updated: 28 May 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

நன்னிலம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

நன்னிலம்,

கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தளர்வுகள் இல்லாத முழுஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல பகுதிகளில் திறக்கப்பட்டுள்ள ரேஷன் கடைகள் முன்பு பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக கூடி பொருட்களை வாங்கி வருகிறார்கள்.

சமூக இடைவெளி

கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்ற நிலையில் ரேஷன் கடைகளில் கூடும் கூட்டத்தால் கொரோனா மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் நன்னிலத்தில் நேற்று திறக்கப்பட்டிருந்த ரேஷன் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் வாங்குகிறார்களா? என போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது பொருட்கள் வாங்க வந்தவர்களை குறிப்பிட்ட இடைவெளியில் வரிசையாக நிற்க வைத்தனர்.

Next Story