100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கலெக்டரிடம் ஒப்படைப்பு


100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கலெக்டரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 30 May 2021 9:27 AM IST (Updated: 30 May 2021 9:27 AM IST)
t-max-icont-min-icon

100 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கலெக்டரிடம் ஒப்படைப்பு.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் குறைந்த அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் உள்ள நிலையில், தமிழக அரசு மாவட்டம் தோறும் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க உத்தரவிட்டது. அந்த வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை திட்ட அலுவலர் (சிப்காட்) நளினி, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் ஒப்படைத்தார்.

இதனை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர், 20 சிலிண்டர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களும், 80 சிலிண்டர்களை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும் ஒதுக்கீடு செய்து அனுப்ப உத்தரவிட்டார்.

Next Story