சுய உதவிக்குழு கடன்களை திரும்ப செலுத்துவதற்கு கட்டாயப்படுத்த வேண்டாம் கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்


சுய உதவிக்குழு கடன்களை திரும்ப செலுத்துவதற்கு கட்டாயப்படுத்த வேண்டாம் கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 Jun 2021 1:07 AM GMT (Updated: 9 Jun 2021 1:07 AM GMT)

சுயஉதவி குழுக்களுக்கு வழங்கிய கடன் தொகையை திரும்ப செலுத்துவதற்கு கட்டாயப்படுத்த வேண்டாம் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நுண்கடன் வழங்கிய நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஞ்சீபுரம்,

கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகைக்கான தவணை மற்றும் வட்டி தொகையை, சுய உதவி் குழுக்கள் திரும்ப செலுத்துவதற்கு நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது.

மேலும் கொரோனா பெருந்தொற்று அதிகமாக பரவி ஊரக மற்றும் நகர்புற மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்தநிலையில், அவசர தேவைக்கென தனியார் நிதி நிறுவனங்களில் மக்கள் கடன் பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, மேற்படி குழுக்கள் பெற்ற கடன் தவணை மற்றும் வட்டி தொகையை உடனடியாக செலுத்தக்கோரி வற்புறுத்த வேண்டாம் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.

புகார் தெரிவிக்கலாம்

மேலும் புதிதாக கடன் உதவி தேவைப்படும் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கி வாழ்வாதாரம் மேம்பட உதவிடலாம்.

இதுதொடர்பாக நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் மற்றும் வட்டி தொகையை திரும்ப செலுத்துவதற்கு குழுக்களை கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் விவரம் குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் 044-27236348 / 9342340815 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story