செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி


செங்கல்பட்டு கலெக்டர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி
x
தினத்தந்தி 22 Jun 2021 10:07 AM GMT (Updated: 22 Jun 2021 10:07 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு கலெக்டர் ஆர்.ராகுல் நாத் தலைமையில் 1430-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது.

மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வம், அலுவலக மேலாளர் வாசுதேவன், செய்யூர் வட்டாட்சியர் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன், மண்டல துணை வட்டாட்சியர் சித்தாமூர் சண்முகம், தலைமையில் துணை வட்டாட்சியர் பாலசந்தர், மற்றும் குறுவட்டு அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் தாலுகா அலுவலகத்தில் 1430-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. ஜமாபந்தியை வண்டலூர் வருவாய் மேலாளர் வேல்முருகன் துவக்கி வைத்தார். பொதுமக்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக பெறப்படும் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த வருவாய் மேலாளர் வேல்முருகனுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Next Story